OOSAI RADIO

Post

Share this post

சுழற்பந்து வீச்சாளர் மரணம்!

இங்கிலாந்தின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் தனது 20 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

இங்கிலாந்தின் வொர்செஸ்டர்ஷைர் (Worcestershire) அணிக்காக விளையாடி வரும் ஜோஷ், சோமர்செட் (Somerset County Cricket Club) அணிக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி சிறப்பாக செயற்பட்டிருந்தார்.

இதனையடுத்து, போட்டியின் நான்காவது நாளான நேற்று (03) உரிய நேரத்தில் சமூகமளிக்காத நிலையில் அவரது நண்பர் அவரை தொடர்ந்தும் தொலைபேசியில் அழைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அவரின் வீட்டிற்கு சென்று பார்த்த போது, அவர் தனது அறையில் இறந்து கிடந்துள்ளார்.

ஜோஷ் பேக்கரின் மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், அறையில் சந்தேகத்துக்கு இடமாக எந்த பொருளும் காணப்படவில்லை என்பதால் பொலிஸார் விசாரணையை கைவிட்டுள்ளனர்.

Leave a comment

Type and hit enter