OOSAI RADIO

Post

Share this post

நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் இன்று வரும்!

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (06) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

மேஷம்

தொழில் செய்பவர்கள் அதிக கவனமுடன் செயல்பட வேண்டும். கடின உழைப்பின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெறுவீர்கள். இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படலாம். பணியாளர்களால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். பரிகாரம் – காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.

ரிஷபம்

தொழில் செய்பவர்களுக்கு மிகவும் சாதகமான சூழல் அமைந்துள்ளது. புதிய சலுகைகள் கிடைக்கும். கூட்டாக சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். சமூகத்தில் உயர்ந்த இடத்தில் உள்ளவர்களினால் நன்மை உண்டாகும். பரிகாரம் – தர்பை புல்லை விநாயகருக்கு வைத்து வழிபட வேண்டும்.

மிதுனம்

தொழிலில் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டால் மட்டுமே நீடித்து நிலைக்க முடியும் என்ற சூழல் உண்டாகும். புதிய மாற்றங்களுக்கு தயாராக வேண்டும். மற்றவர்களுடன் பழகுவதில் கவனம் தேவை. பரிகாரம் – ஆஞ்சநேயருக்கு தேங்காய் காணிக்கை அளிக்க வேண்டும்.

கடகம்

தொழில் செய்பவர்கள் மார்க்கெட்டிங் மற்றும் தொழில் ரீதியான கேளிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புதிய வேலையை துவங்கும் மிகவும் ஏற்ற நாள். மார்க்கெட்டிங்கிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உயர் அதிகாரிகளினால் நன்மைகள் உண்டாகும். பரிகாரம் – துர்கா தேவியை வழிபட வேண்டும்.

சிம்மம்

கடின உழைப்பின் மூலம் நீங்கள் நினைத்த குறிக்கோளை அடைவீர்கள். சில சவாலான சூழல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படலாம். உங்கள் புத்தி சாதூரியத்தினால் அலுவலகத்தில் நன்மதிப்பு உண்டாகும். பரிகாரம் – பெண் குழந்தைகளுக்கு உணவு அளிக்க வேண்டும்.

கன்னி

தொழில் ரீதியான தொடர்புகளால் கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். கடினமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் பெரிய வெற்றியை பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பரிகாரம் – வாழை மரத்தடியில் நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

துலாம்

தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பிரச்சனைகளை மிகவும் புத்திசாலித்தனமாக தீர்த்து வைப்பீர்கள். வேலையை தள்ளிப் போடுவதை தவிர்ப்பது நல்லது. பரிகாரம் – அதிகாலையில் இருந்து நீர் காணிக்கை அளித்து சூரிய பகவானை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

அனுபவசாலிகளின் அறிவுரை கேட்டு செயல்படுவதன் மூலம் தொழில் விருத்தி ஏற்படும். தொழில் ரீதியான கணக்கு வழக்குகள் போன்றவற்றை சற்று தள்ளிப் போடுவது நல்லது. பரிகாரம் – லட்சுமி தேவிக்கு தாமர இலையை வைத்து வழிபட வேண்டும்.

தனுசு

தொழிலில் சரியான அணுகுமுறை கையாண்டால் அதிக லாபம் கிடைக்கும். புதியதொரு உயரத்தை தொடுவீர்கள். பணியாளர்களை கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். பரிகாரம் – கருப்பு நாய்க்கு ரொட்டியை உணவளிக்க வேண்டும்.

மகரம்

வேலையில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். தொடர்ச்சியான வேலைகளால் சற்று மந்தமாக நடைபெறும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும். உயர் அதிகாரிகளுடன் சற்று கவனமாக பழக வேண்டும். பரிகாரம் – மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய வேண்டும்.

கும்பம்

அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். உடல் ரீதியான பிரச்சினைகளால் சற்று அவதிப்படும் சூழல் உண்டாகலாம். கடின உழைப்பின் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பரிகாரம் – எறும்புகளுக்கு அரிசி மாவு மற்றும் சர்க்கரை கலந்து உணவு அளிக்க வேண்டும்.

மீனம்

உங்களது முழு கவனத்தையும் மார்க்கெட்டிங்கில் செலுத்தினால் தொழில் விருத்தி நன்றாக இருக்கும். கூட்டாக சேர்ந்து தொழில் செய்பவர்கள் வெளிப்படை தன்மையுடன் செயல்படுவது தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க உதவும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு சில மாற்றங்கள் இன்று நிகழும். பரிகாரம் – மீன்களுக்கு உணவளிக்க வேண்டும்.

Leave a comment

Type and hit enter