OOSAI RADIO

Post

Share this post

அக்குள் வியர்வை கலந்த சோறு!

ஜப்பான்‌ உணவகங்களில்‌ புதிதாக அக்குளை பயன்படுத்தி வியர்வை கலந்த சோற்று உருண்டைகள்‌ தயாரிக்கப்படுகிறதாக கூறப்படும் தகவல் இளையங்களில் வைரலாகி வருகின்றது.

சோறில்‌ தயாரிக்கப்படும்‌ ஓனிகிரி என்ற உணவு ஜப்பானில்‌ பாரம்பரிய உணவாக உள்ளது. இந்நிலையில்‌ இதனை கையினால்‌ தயாரிப்பதை விட புதிதாக அக்குளுக்கு வைத்து முக்கோணமாகவும்,‌ வட்டமாகவும்‌ செய்து விற்பனைக்கு வந்துள்ளதாக ஜப்பான்‌ நாட்டு செய்திகள்‌ தெரிவிக்கின்றன.

இதற்கு உணவகங்களில்‌ பணிபுரியும்‌ இளம்‌ பெண்கள்‌ தங்கள்‌ அக்குள்களைப்‌ பயன்படுத்தி ஓனிகிரியை வடிவமைக்கிறார்களாம்‌. உணவு தயாரிக்கும்‌ பெண்கள்‌ கண்டிப்பான சுகாதார நெறிமுறையைப்‌ பின்பற்றுகிறார்கள்‌. அவர்கள்‌ உணவை தயாரிக்கும்‌ முன்பு தங்கள்‌ உடல்‌ பாகங்களை முழுமையாக கிருமி நீக்கம்‌ செய்கிறார்கள்‌.

அதன் பின்னர்‌ பெண்கள்‌, வியர்க்கத்‌ தொடங்கும்‌ அளவுக்கு உடற்பயிற்சி செய்கிறார்கள்‌. இவ்வாறாக அவர்கள்‌ தங்கள்‌ கைகளைப்‌ பயன்படுத்துவதற்குப்‌ பதிலாக, தங்கள்‌ அக்குள்களைப்‌ பயன்படுத்தி குறித்த உணவைத்‌ தயாரிக்கிறார்கள்‌.

சில உணவகங்கள்‌ இந்த செயல்முறையை வெளிப்படையாக நிரூபிக்கின்றன. இது வாடிக்கையாளர்கள்‌ இந்த தனித்துவமான நுட்பத்தைப்‌ பார்க்க அனுமதிக்கிறது.

மனித வியர்வை இல்லாத கையினால்‌ தயாரிக்கப்படும்‌ ஓனிகிரியை விட 10 மடங்கு விலைக்கு விற்பனை செய்வதாகக்‌ கூறப்படுகிறது’

இந்த தயாரிப்பை சிலர்‌ தனித்துவமான சுவையாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்‌. சோற்றுடன்‌ மீன்‌, இறைச்சி வகைகளை வைத்து கடற்பாசியால்‌ மூடி இந்த ஓனிகிரி விற்கப்படுகின்றது.

Leave a comment

Type and hit enter