சிறுவர்களுக்கு தீவிரமாக பரவும் 100 நாள் இருமல்!
பிரித்தானியாவில் அண்மைக் காலமாக இளம் சிறுவர்களில் 100 நாள் இருமல் வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய மருத்துவர்கள் தெரிவிக்கையில்,
100 நாள் இருமல் என்பது சிறுவர்களை மிகவும் வருத்திவிடும் என்றும், கடந்த சில மாதங்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனவரி மாதம் முதல் 8,015 சிறுவர்கள் 100 நாள் இருமல் பாதிப்புடன் மருத்துவர்களை நாடியுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் தடுப்பூசியால் இந்த நோயை குணப்படுத்த முடியும் என்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
2023ல் இதே காலகட்டத்தில் 100 நாள் இருமல் பாதிப்பானது உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கை என்பது 2,041 என்றே கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதத்தில் மட்டும் 52 சிறுவர்கள் 100 நால் இருமலுடன் சிகிச்சை நாடியுள்ளனர்.
ஆண்டு முழுவதும் 48 சிறார்கள் மட்டுமே பாதிக்கப்பட்டனர்.
தற்போது 100 நாள் இருமல் பாதிப்பு எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதை மருத்துவ நிபுணர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
3 மாதத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு 100 பாதிக்கப்பட்ட சிறுவர்களிலும் ஒருவர் இறக்க நேரிடலாம் என்றும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இருமல் காரணமாக சிறுவர்கள் மூச்சுவிட முடியாமல் போகும் நெருக்கடி ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.