OOSAI RADIO

Post

Share this post

விஜயை எச்சரித்த ஜேம்ஸ் வசந்தன்!

நடிகர் விஜயின் எதிர்கால அரசியல் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல் ஒன்றில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தற்போது ‘கோட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பின்னர், தான் ஒப்பந்தம் செய்துள்ள 69 -வது படத்தை முடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகினால் பெரிய இழப்பு ஏற்படும் என்று பலரும் பேசி வருவது தொடர்பாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.

அவர் பேசுகையில், “சினிமாவில் உச்சத்தில் இருந்து வரும் நடிகர் விஜய் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். அவரை நம்பி சினிமாவில் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் அவர் அரசியலுக்கு வருவது தீர்க்கமான முடிவு.

அவர் ஒரு வேளை முதலமைச்சரானால் கூட சம்பளம் ரூ.2 லட்சம் தான். அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ஆனால் அவர் சில விடயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசியல் களத்தில் சோதனைகள் வரும்.

குறிப்பாக அவர், தன்னை சுற்றி உள்ளவர்களை அரசியல் சேவை எண்ணம் கொண்டவர்களாக வைத்திருக்க வேண்டும்.

ஏனெனில், உயர் மட்டத்திற்குப் போனால் தன்னைச் சுற்றி இருக்கும் நான்கு பேர் சொல்வதுதான் நமக்கு வேத வாக்காக இருக்கும். அதனால் அவர் தன்னை சுற்றி இருப்பவர்களை சரியானவர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். அவருக்கு அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கிறது” என்றார்.

Leave a comment

Type and hit enter