OOSAI RADIO

Post

Share this post

IPL போட்டியில் முதன் முறையாக யாழ். இளைஞன்!

இந்தியாவின் பிரபலமான கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல்லில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் இன்று (8) களமிறங்கியுள்ளார்.

இன்றையதினம் ஹைதாரபாத்தில் இடம்பெற்றுவரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் மோதி வருகின்றனர்.

இந்த போட்டியில் ஹைதரப்பாத் அணி சார்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் களமிறங்கியுள்ளார்.

குறிப்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட வியாஸ்காந்த் இன்று தனது முதலாவது ஐ.பி.எல் ஆட்டத்தில் ஆடுகிறார்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் பந்துவீச்சியில் விஜயகாந்த் வியாஸ்காந்த் 4 ஓவர்கள் வீசி 27 ஓட்டங்களை விட்டுக் கொடுத்துள்ளார்.

Leave a comment

Type and hit enter