OOSAI RADIO

Post

Share this post

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம்!

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பண தொகையை மிக பாரிய அளவில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பணத்தை அதிகரிப்பது குறித்த யோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் பிரதானி ஏ.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொது மற்றும் சிவில் அமைப்புக்களிடம் இருந்து இது குறித்த யோசனைகள் கோரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கட்டுப்பணத் தொகையை அதிகரிக்க வேண்டுமென தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம், ஏனைய பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினரின் யோசனைகளின் அடிப்படையில் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தனித்து இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பணம் அதிகரிப்பு

இதேவேளை, அரசியல் கட்சியொன்றின் வேட்பாளரது கட்டுப்பணத் தொகையை 2.4 மில்லியன் ரூபாவாகவும், சுயாதீன கட்சி வேட்பாளரின் கட்டுப் பணத் தொகையை 3.1 மில்லியன் ரூபாவாகவும் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியொன்றின் வேட்பாளர் தற்பொழுது 50,000 ரூபாவினையும் சுயாதீன குழுவொன்றின் வேட்பாளர் 75,000 ரூபாவினையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட ஒரு வகுப்பைச் சேர்ந்த சமூகத்தினர் அரசியல் ஈடுபடுவதனை வரையறுக்கும் நோக்கில் இவ்வாறு கட்டுப்பணத் தொகை அதிகரிக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a comment

Type and hit enter