OOSAI RADIO

Post

Share this post

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் புதிய விலைகள்!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்படக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மன்னாகே தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்திற்கும், நிதி இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் நேற்று (08) கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலின் போது பொதுப் போக்குவரத்து வாகனங்கள் முதலாவதாகவும், மோட்டார்சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் என்பவற்றை இரண்டாவதாகவும் கொண்டு வருவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து சாதாரண கார்கள் மற்றும் சொகுசு வாகன இறக்குமதிக்கான அனுமதியை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 4 கட்டங்களின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது மற்றும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பான அறிக்கை விரைவில் வாகன இறக்குமதியாளர்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Type and hit enter