OOSAI RADIO

Post

Share this post

இலங்கையில் 1 கிலோ இஞ்சி 3,000 ரூபா!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (09) வியாழக்கிழமை மரக்கறிகளின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இஞ்சி விலை கிலோ மூவாயிரம் ரூபாயாக பதிவாகியுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கரட் 120/150 ரூபாவாகவும்,

ஒரு கிலோ பீன்ஸ் 150/180 ரூபாவாகவும்,

ஒரு கிலோ லீக்ஸ் 150/180 ரூபாவாகவும்,

ஒரு கிலோ தக்காளி 30/40 ரூபாவாகவும்,

ஒரு கிலோ பச்சை மிளகாய் 70/80 ரூபாவாகவும்,

ஒரு கிலோ கறிமிளகாய் 150/180 ரூபாவாகவும்,

ஒரு கிலோ வெங்காயத்தாள் 110 ரூபாவாகவும்,

ஒரு கிலோ முள்ளங்கி 40/50 ரூபாவாகவும்,

ஒரு கிலோ வெண்டைக்காய் 90/120 ரூபாவாகவும்,

ஒரு கிலோ பீர்க்கங்காய் 120/150 ரூபாவாகவும்,

ஒரு கிலோ பாகற்காய் 130/150 ரூபாவாகவும்,

ஒரு கிலோ பூசணிக்காய் 25/30 ரூபாவாகவும்,

ஒரு கிலோ கத்தரிக்காய் 90/150 ரூபாவாகவும்,

ஒரு கிலோ முட்டைக்கோஸ் 90/110 ரூபாவாகவும்,

ஒரு கிலோ தேசிக்காய் 600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரு கிலோ இஞ்சி 3,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter