ஈழத் தமிழருக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம்!
சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் இவ்வருடம் ஜீலை மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ள வாய்ப்பானது பெரிதும் பாராட்டை பெற்றுள்ளது.
ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் கடந்த புதன்கிழமை கிரீஸில் இருந்து பிரான்ஸை (France) வந்தடைந்துள்ளது.
சர்வதேச ரீதியில் 10000 பேருக்கு ஒலிம்பிக் தீப்பந்தத்தினை ஏந்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பரிஸ் நகரில் கடந்த வருடம் சிறந்த பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரான்சின் பாரிசில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் 2023ஆம் ஆண்டுக்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா பெற்றிருந்தார்.
இந்நிலையில் பரிஸ் ஒலிம்பிக் சுடரை (Olympic torch) இம்முறை அவர் ஏந்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.