OOSAI RADIO

Post

Share this post

மலேசியாவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்!

மஸ்கெலியா மொடிங்ஹேம் தோட்டத்தைச் சேர்ந்த ராஜகுமார் டேவிட்சன் என்ற 24 வயது இளைஞன் பணிக்காக மலேசியா சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

மலேசியா கோலாலம்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் திகதி கொதிகலன் (Boiler) குறித்த இளைஞன் மீது விழுந்ததில் படுகாயமடைந்து கோலாலம்பூரில் உள்ள தனியார் வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 5 ஆம் திகதி காலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக விராசணைகளை மேற்கொண்டிருந்த அந்நாட்டு பொலிஸார் இளைஞனின் குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து இளைனின் சடலம் இன்று இரவு 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது.

இந்நிலையில், இளைஞனின் தந்தையிடம் ஒப்படைக்கப்படவுள்ள சடலம் அவரின் சொந்த ஊரான மஸ்கெலியா மொட்டிங்ஹேம் தோட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு இறுதி கிரிகைகள் இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a comment

Type and hit enter