58 வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் ராஷ்மிகா!
இந்தியளவில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தென்னிந்திய சினிமாவையும் தாண்டி பாலிவுட்டில் இவருக்கு அதிக வாய்ப்புகள் வருகிறது.
கடைசியாக அனிமல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். கடுமையான விமர்சனங்களை இப்படம் சந்தித்து இருந்தாலும் கூட, வசூல் ரீதியாக இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
இந்த நிலையில், அடுத்ததாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கும் பாலிவுட் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, பாலிவுட் சினிமாவில் 58 வயதாகும் நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடிக்கவுள்ளாராம்.
58 வயது நடிகருடன் ரொமான்ஸ்
பாலிவுட்டில் டாப் நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சல்மான் கான் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸின் திரைப்படம் சிக்கந்தர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் முதல் முறையாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடிக்கவுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா என்பது குறிப்பிடத்தக்கது.