இலங்கையில் இலவச வழங்கப்படும் மரக்கறி தன்சல்!
கொழும்பில் திடீரென குவிந்த பெருந்தொகை மக்களால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹரகம பன்னிபிட்டிய பிரதேசத்தில் சுமார் 20,000 பேருக்கு இலவச மரக்கறிகள் வழங்கும் காய்கறி தன்சல் வழங்கப்பட்டமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மீகொட பொருளாதார நிலையம் உட்பட பல மரக்கறி வியாபார நிலையங்கள் மற்றும் வியாபார ஸ்தலங்களின் உரிமையாளரான ஆனந்த விஜேரத்னவினால் தன்சல் வழங்கப்பட்டது.
இலவச மரக்கறிகளை பெறுவதற்காக இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்கு மக்கள் வீதியோரங்களில் வரிசையில் காத்திருந்தனர். இதன்போது 16 வகையான காய்கறிகள் அடங்கிய பார்சல் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.