எச்சரிக்கை – கடுமையான சூரிய புயல்!
கடுமையான சூரிய புயல் ஒன்று உலகை தாக்கும் என தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration – NOAA) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி இன்றிரவு முதல் நாளை இரவு வரை கலிபோர்னியா – தெற்கு அலபாமா வரை குறித்த காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா அரசின் கீழ் இயங்கும், தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆய்வகம், கடுமையான சூரிய காந்த புயலுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது. பூமியின் வட அரைகோளத்தில் காந்த புயல் காரணமாக தகவல் தொடர்பில் பாதிப்பு ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜிபிஎஸ், ரேடியோ அலைவரிசை, தகவல் தொடர்பு, மின் அமைப்பு போன்றவையும் இதனால் பாதிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த 20 ஆண்டுகளுக்கு பின் ஏற்படும் வலுவான சூரிய காந்த புயலின் தீவிரத்தால் செயற்கைகோள்களின் செயற்பாடுகளும் முடங்க வாய்ப்புள்ளதாக, அமெரிக்க ஆய்வகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.