OOSAI RADIO

Post

Share this post

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

தற்போதைய அதிக சூரிய ஒளி கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் வெளியே செல்லும் போது கறுப்பு கண்ணாடி அணிந்து செல்வது மிகவும் பொருத்தமானது என சுகாதார அமைச்சின் மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நாட்களில் அதிகப்படியான வெயிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், சருமத்தில் சூரிய ஒளி ஊடுருவாமல் தடுக்கும் கிரீம்களை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மருத்துவரின் ஆலோசனைக்கமைய அதனை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மேலும், தற்போதைய அதிக வெப்பம் காரணமாக, இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் பொருத்தமானது.

மேலும், தர்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரி போன்றவற்றில் பானங்கள் தயாரிப்பது மிகவும் பொருத்தமானது என அவர் கூறியுள்ளார். போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் சிலர் மயக்கமடைந்து விடுகிறார்கள்.

தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு போன்றவை உட்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும். மேலும், வெயிலில் பயணம் செய்யும் போது தொப்பி அணிய வேண்டும்.

இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம். பருத்தி ஆடைகள் போன்ற லேசான ஆடைகளை அணியுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter