IPL இல் இமாலய சாதனை!
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் குஜராத் டைடன்ஸ் அணி பாரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
ஐ.பி.எல் தொடர்பின் இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்றுவரும் வருகின்றது.
குறித்த போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோரே சதமடித்து இந்த சாதனையை படைத்துள்ளனர்.
குறிப்பாக சுப்மன் கில் 55 பந்துகளுக்கு 104 ஓட்டங்களையும், சாய் சுதர்ஷன் 51 பந்துகளில் 103 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.
மேலும் குஜராத் டைடன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 231 ஓட்டங்களை பெற்றுகொண்டுள்ளது.
இதன்படி, 232 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகின்றது.