OOSAI RADIO

Post

Share this post

இலங்கையில் வசமாக சிக்கிய 4,000 நிறுவனங்கள்!

இலங்கையில் சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் வரிநிலுவையைக் கொண்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை 4,479 என்று தெரிய வந்துள்ளது.

குறித்த தகவலை பேராதனைப் பல்கலைக்கழக பொருளாதாரக் கற்கைத் துறை பேராசிரியர் வசந்த அதுகோராள முன்வைத்துள்ளார்.

குறித்த வரி நிலுவையைச் செலுத்தாத நிறுவனங்களில் மதுபான உற்பத்தி நிறுவனங்கள் பலவும் உள்ளடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி “ஒரு ​கோடி தொடக்கம் ஒன்றரைக் கோடி வரை – 3108 நபர்களும், ஐந்து கோடி தொடக்கம் பத்துக் கோடி வரை – 632 நபர்களும், பத்துக் ​கோடி தொடக்கம் முப்பது கோடி வரை 457 நபர்களும் முப்பது கோடி தொடக்கம் ஐம்பது கோடி வரை 104 நபர்களும் ஐம்பது கோடி தொடக்கம் நூறு கோடி வரை 88 நபர்களும் நூறு ​கோடிக்கும் ​மேல் 90 நபர்களும் பாரிய வரி நிலுவையை கொண்டுள்ளதாகவும் பேராசிரியர் கூறியுள்ளார்.

Leave a comment

Type and hit enter