ஐப்பானில் பல வேலை வாய்ப்புக்கள்!
ஐப்பான் நாட்டிலிருந்து இலங்கையர்களுக்கு மேலும் சில துறைகளில் புதிய தொழில்வாய்ப்புக்கள் கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
விமான நிலைய பராமரிப்பு, கட்டிட நிர்மாணத்துறை, கட்டிட சுத்திகரிப்பு உள்ளிட்ட 12 துறைகளில் இலங்கையா்களுக்கான தொழில்வாய்ப்புக்களை வழங்க ஜப்பான் இணங்கியுள்ளது.
இதற்கமையவே, தற்போதைக்கு ஜப்பானில் கட்டிட சுத்திகரிப்பாளர்கள் வேலைக்கும் இலங்கையர்கள் விண்ணப்பிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், அவற்றுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜுன் 05ஆம் திகதி தொடக்கம் சமர்ப்பிக்க முடியும்.
அதேவேளை, விண்ணப்பங்கள் தொடர்பான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் ஜூலை மாதமளவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் சுமார் 37,000 இலங்கையா்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
I am ready