பணம் அதிகரிக்கும் வாஸ்து மீன் ரகசியம்!
வீடுகளில் மீன் தொட்டிகளை வளர்ப்பதற்கு அறிவியல் காரணமும் வாஸ்து காரணமும் உண்டு
ஒரு மீன் தொட்டியை 5 நிமிடம் பார்த்து கொண்டிருந்தாலே, மனதில் இனம்புரியாத அமைதி குடிகொண்டுவிடும் என்கிறார்கள், அந்தவகையில், உடலுக்கும் மனதுக்கும் நன்மை தரக்கூடியது.
மீன்களை வளர்ப்பது, இதய துடிப்பை குறைக்க உதவுவாக, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நரம்பு மண்டலத்தை செயல்படுத்துகிறது. இது ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் கவலைகளின் தாக்குதல்களையும் குறைக்கிறதாம்.. மீன் தொட்டிக்குள் மீன்கள் நீந்தும் சத்தமானது, நம்முடைய பதட்டத்தை நீக்கி, கவனத்தை திருப்பும் திறன்கொண்டது.
மீன் தொட்டிகளை வைப்பதால், நேர்மறை ஆற்றல் அந்த பகுதிகளில் பரவும். தொட்டியில் நகரும் ஒரு மீன் நேர்மறை அதிர்வுகளை வெளியிடுவதாக நம்பப்படுகிறது. மீன்களை தொட்டியில் வளர்த்து வருவதால், வீட்டிற்குள் பணவரவு பெருகுமாம்.
அத்துடன், அந்த குடும்பத்தின் ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. எனவேதான், மீன் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என்கிறார்கள். தொட்டிகள் சதுரமாகவோ, நீண்ட சதுரமாகவோ இருக்கலாம்.
மீன்களை பொறுத்தவரை, கண்களை திறந்துகொண்டே தூங்கும் தன்மை கொண்டது. எனவே, மீன்கள் எப்போதுமே விழிப்புடனேயே இருக்கக்கூடியவை என்பதால், தீயசக்திகள் உள்ளே நுழையவிடாமல் தடுத்துவிடும்.
மீன்களின் எண்ணிக்கை முதல் மீன்களின் நிறம்வரை அனைத்துமே கவனிக்க வேண்டிய விஷயமாகும்.. வாஸ்து மீன் என்றாலே டிராகன்தான் முன்னணியில் நிற்கிறது. பணம் + செல்வம் + ஆரோக்கியம் + மகிழ்ச்சி + மனஅமைதி என அத்தனையையும் சேரும் என்பார்கள். அதனால்தான் இந்த மீன் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.
விலை குறைவான, தங்க மீன்களும், வாஸ்து மீனாகவே கருதப்படுகிறது.. டிராகன் மீன், தங்க மீன்களுக்கு அடுத்தபடியாக, பிளாக்மூர், பட்டாம்பூச்சி கோய், மலர் கொம்பு மீன் போன்றவை அதிர்ஷ்டமாகக் கருதப்படும் மீன்களாகும்.
இப்படி எத்தனை வாஸ்து மீன் வகைகள் இருந்தாலும், கருப்பு நிறத்திலும் மீன்கள் இருக்க வேண்டும். வீட்டிலுள்ள திருஷ்டிகளுக்காக மட்டுமல்லாமல், வீட்டில் நுழையும் எதிர்மறை ஆற்றல்களை முற்றிலும் இந்த கருப்பு மீன் உறிஞ்சிவிடுமாம்.
ஒருவேளை அந்த கருப்பு மீன் இறந்துவிட்டால், வீட்டிலிருக்கும் கெட்ட சக்திகளை அந்த மீன் தனக்குள் ஈர்த்து கொண்டது என்று அர்த்தமாம்..
எனவே, கருப்பு மீன் இறந்தால், பதற்றமடைய தேவையில்லை. அதேபோல, மீன் இறந்துவிட்டால், உடனடியாக அதை வெளியே எடுத்துவிட வேண்டும். மீண்டும் இன்னொரு கருப்பு மீனை வளர்க்க துவங்கலாம். அதுமட்டுமல்ல, எந்த கலர் மீன் இறந்துவிடுகிறதோ, அதே கலர் மீனை மறுபடியும் வாங்கி வளர்க்க வேண்டும்.