OOSAI RADIO

Post

Share this post

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம்!

வரலாற்றில் முதன்முறையாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சும் சமூக வலுவூட்டல் அமைச்சும் இணைந்து இந்த அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளன.

புதிய கூட்டணியின் களுத்துறை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, சமுர்த்தி வங்கியின் ஊடாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கடன் வழங்கும் முதலாவது வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவேல் மற்றும் புதிய அலையன்ஸ் முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அசங்க ஸ்ரீநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a comment

Type and hit enter