குறைந்தது தங்கத்தின் விலை!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதற்கமைய நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (14) செட்டியார் தெரு தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 703,988 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம் 24,840 ரூபாவாகவும் 24 கரட் தங்கப் பவுண் 198,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் 22,770 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 182,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,740 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 173,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.