OOSAI RADIO

Post

Share this post

குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!

அவுஸ்திரேலியாவிலேயே முதன்முறையாக தெற்கு மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நவீன உலகில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை, அவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், அதன் பயன்பாடு பல்வேறு தீமைகளையும் ஏற்படுத்துகிறது.

சமூக ஊடகங்கள் குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கும் மன வளர்ச்சிக்கும் தீங்கு விளைவிக்கும். மேலும் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை வீணடிக்கிறார்கள்.

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக, தெற்கு ஆஸ்திரேலியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று பிரதமர் பீட்டர் மலினாஸ்காஸ் அறிவித்துள்ளார். அதன்படி, குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த பெற்றோரின் ஒப்புதல் அவசியம்.

இந்த செயல்முறையை ஆராய முன்னாள் ECJ ராபர்ட் பிரெஞ்ச் தலைமையில் ஒரு குழுவையும் அரசாங்கம் நியமித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Leave a comment

Type and hit enter