OOSAI RADIO

Post

Share this post

அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி செலுத்தியவரா நீங்கள்?

அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தேவையற்ற அச்சம்கொள்ள தேவையில்லை என தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை செலுத்தியதால் இரத்த உறைவு உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக அந்நிறுவனத்தின் மீது உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில், பிரித்தானியாவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என அந்த தடுப்பூசியை உற்பத்தி செய்த நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, குறித்த நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகள் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு எதிர்காலத்தில் பாதகமான விளைவு ஏற்படாது என்றும், இலங்கையர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Type and hit enter