OOSAI RADIO

Post

Share this post

பிரித்தானியாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்களுக்கு…

பிரித்தானியாவிலுள்ள சர்வதேச மாணவர்களுக்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியிருந்த ஒரு விடயம், தற்போது அவர்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது.

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவ மாணவியர், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பிரித்தானியாவில் பணி செய்யும் வகையில், பட்டதாரி வீசா (graduate visa) என்னும் வீசா வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், அந்த வீசாவை மதிப்பாய்வு செய்து, அதன் முடிவுகளை இன்று வெளியிட இருப்பதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

பட்டதாரி வீசா தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காகவே இந்த மதிப்பாய்வு மேற்கொள்ளப்படுவதாக பிரித்தானிய உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்தல் தொடரும் நிலையில், இந்த பகுப்பாய்வின் முடிவுகள் மாணவர்களுக்கு பாதகமாக வருமானால், அவர்கள் வேறு நாடுகளை நோக்கிச் சென்றுவிடுவார்கள். அதனால் பிரித்தானியாவுக்கும் இழப்பு என்று கல்வியாளர்கள் கூறியிருந்தார்கள்.

ஆனால், மதிப்பாய்வின் முடிவுகள் சர்வதேச மாணவர்களுக்கு பெருமகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளன. பட்டதாரி வீசாக்கள், தவறாக பயன்படுத்தப்படவில்லை என மீளாய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன.

பிரித்தானிய அரசின் புலம்பெயர்தல் ஆலோசனை கமிட்டி (The Migration Advisory Committee (MAC), சர்வதேச மாணவர்களை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வேலை செய்ய அனுமதிப்பது தொடரவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter