OOSAI RADIO

Post

Share this post

மர்மமான நோயுடன் போராடி வரும் மக்கள்!

பிரித்தானியாவில் உள்ள கடலோர நகரத்தில் வசிக்கும் மக்கள் மர்மமான நோயுடன் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து தற்போது விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கலோர நகர பகுதியில் வசிக்கும் மக்கள், கடுமையான நீர் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, குமட்டல் அல்லது வாந்தி, லேசான காய்ச்சல் மற்றும் பசியின்மை போன்ற நோய்தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறான நோய் நிலைமைகளுக்கு தண்ணீர் பிரச்சினைதான் முக்கிய காரணம் என சமூக ஊடகங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீரின் தரநிலைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், தண்ணீர் விநியோகம் நன்றாக உள்ளது என்றும் நீர்விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் UK ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சிக்கு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Type and hit enter