உயரும் எரிபொருளின் விலை – கட்டுப்படுத்த புதிய திட்டம்!
சர்வதேச சந்தையில் இடம்பெறும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்கொள்ள நேரும் நிலையை கட்டுப்படுத்தும் வகையில், எதிர்காலத்தில் ஹெஜின் உடன்படிக்கை கொடுக்கல் வாங்கல்களுக்கு பிரவேசிக்க உள்ளதாக எரிசக்தி, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், தயாசிறி ஜயசேகர எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது, தயாசிறி ஜயசேகர, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கால இழப்புக் காப்பு கொடுக்கல் வாங்கல்களை நாடுவதற்கான காரணங்கள் யாவை? எதிர்காலத்திலும் நட்டங்கள் ஏற்படக்கூடிய எதிர்கால இழப்புக் காப்பு கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு தொடர்ந்தும் பதிலளித்த அமைச்சர் கஞ்சன,
2010ஆம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மின்சார ஹெஜின் கொடுக்கல் வாங்கல்களில் பிரவேசிக்கவில்லை என்பதையும் சபையில் சுட்டிக்காட்டினார்.