O/L மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!
நடந்துமுடிந்த கல்விப்பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் விஞ்ஞான வினாக்கள் இரண்டுக்கு இரண்டு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஆந்த் ஜயசுந்தர தெரிவித்தார்.
அதன்படி விஞ்ஞானப் பாடத்தின் 9 மற்றும் 39 ஆகிய வினாக்களுக்கே இலவசமாக இரண்டு புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
மேலும் கல்விப் பொதுத் தரப் பரீட்சையின் விஞ்ஞான வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.