ஒரே நாளில் விலை உயர்ந்த தங்கம்!
சென்னையில் தங்கம் விலை இன்று 560 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றமை நகைப்பிரியர்களுக்கு க்ஷாக் கொடுத்துள்ளது.
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே நீடித்து வரும் நிலையில் நகைப்பிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
அந்த வகையில் சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 795 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 50 சதம் உயர்ந்து 92 ரூபாய் 50 சதம் விற்பனை செய்யப்படுகிறது.