உலகக் கிண்ணம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ண போட்டியில் அரையிறுதி போட்டி நடைபெறவுள்ள தினத்திற்கு மாற்று தினம் ஒன்று வழங்கப்பட மாட்டாது என ஐஐசி தீர்மானித்துள்ளது.
போட்டியில் மழை குறுக்கிட்டால் 4 மணித்தியாலங்கள் மட்டுமே கூடுதல் நேரம் வழக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஜூன் 2 ஆம் திகதி ஆரம்பமாவதுடன், இறுதிப் போட்டி ஜூன் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
முதல் அரையிறுதிக்கு மேலதிக நாள் வழங்கப்பட்டாலும், இரண்டாவது அரையிறுதிக்கு மேலதிக நாள் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.