OOSAI RADIO

Post

Share this post

ஜனாதிபதி தேர்தல் வெற்றி யாருக்கு? சோதிடர் கூறிய அதிர்ச்சி தகவல்!

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கொள்ளுபிட்டிய பகுதியில் உள்ள சோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதுவும் அந்நாளில் ஜனாதிபதி தேர்தல் நடக்குமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வெற்றியளிக்கக்கூடியதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் பிற்பகல் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் குழுவுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அதோடு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, கடன் மறுசீரமைப்பு வெற்றியடையும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூறுவது போன்று பாரிய கடன் குறைப்புக்களை எதிர்பார்க்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

Leave a comment

Type and hit enter