OOSAI RADIO

Post

Share this post

இலங்கையில் வாகன உதிரிபாகங்கள் இறக்குமதி!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 15 வருடங்களில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு 10,000க்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், இந்த மோசடி தொடர்பான விசாரணைக்கு தரவு அமைப்பின் நகலை பெற்றுக்கொள்ளுமாறும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணைகளின் பின்னர், மோசடியில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு விசாரணை அதிகாரிகளுக்கு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியினால் ஏற்பட்ட நட்டத்தை விட இந்த மோசடி மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு மிக அதிகம் எனவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Type and hit enter