OOSAI RADIO

Post

Share this post

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

இன்று (19) அதிகாலை 3 மணி முதல் நாளை (20) அதிகாலை 3 மணி வரை நடைமுறையாகும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச செயலகங்களுக்கு 2ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தின் மேலும் 4 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை,
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்டத்தின் இன் கீழ் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Type and hit enter