ஈரான் ஜனாதிபதியின் உடல் மீட்பு! (படங்கள்)
ஈரான் நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார்.
அவருடன் சென்றவர்களும் உயிரிழந்ததாக அந்நாட்டு மக்களுக்கு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த அஜர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகர் மலைப்பகுதியில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.