OOSAI RADIO

Post

Share this post

திருடுவதற்கு மாத சம்பளம்!

இந்திய மாநிலம் கர்நாடகாவில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தபோது, அவர்களுக்கு மாத சம்பளம் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது.

கர்நாடகாவின் கொரட்டகெரே பொலிஸார், வெங்கடேஷ், ராகவேந்திரா, வினேஷ் பட்டீல் ஆகிய 3 பேரை திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கைது செய்தனர்.

அவர்களில் வெங்கடேஷ் என்பவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவர் கேபிள் வயர்களை திருடி வரும் ராகவேந்திராவுக்கு மாதம் 20,000 ரூபாய் ஊதியமாக கொடுத்து வந்துள்ளார்.

இவ்வாறு கேபிள் வயர்களை திருடுவதை இவர்கள் வேலையாக வைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில், வட்டரகெரே கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கேபிள் வயர்கள் திருடுபோனதும், அங்கிருந்த கண்காணிப்பு கமெராவில் வெங்கடேஷ், ராகவேந்திராவின் உருவம் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.

அதன் அடிப்படையிலேயே வினேஷ் உட்பட மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் ஒரு கார், கேபிள் வயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தற்போது வெங்கடேஷ், ராகவேந்திரா, வினேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment

Type and hit enter