புதனின் அதி பலத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, புத்திசாலித்தனம் மற்றும் தொழிலுக்கு அடிப்படை கிரகமான புதன், மே 21 மற்றும் 24 க்கு இடையில் அதிக பலத்துடன் காணப்படுவார். மே 31 அன்று, சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்கு மாறுவதற்கு முன்னதாக இந்த குறுகிய காலகட்டத்தில் சில ராசிக்காரர்களுக்கு புதன் பெரிதும் அருள்புரிவார். எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை, உற்சாகமான புதன் மாற்றுவார் என்பதை தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதனின் உற்சாகமான காலகட்டம் பல நன்மைகளைத் தரும். வியாபாரம் செய்பவர்கள் அனுகூலமான பலன்களைப் பெறுவார்கள். வேலை செய்பவர்களுக்கும் இந்த நேரம் வெற்றி தரும். புதிய வேலை வாய்ப்புகள், பணியில் மனநிறைவு கிடைக்கும். பணி உயர்வு, சம்பள உயர்வு போனஸ் என எதிர்பாராத பண வரத்து அதிகரிக்கும் அதே வேளையில் செலவுகளும் குறையும். ஒட்டுமொத்தமாக, இந்த காலகட்டத்தில் புதனின் செல்வாக்கு ரிஷப ராசியினருக்கு அமோகமாக இருக்கும்.
மிதுனம்
புதனின் உத்வேகமான காலகட்டத்தில், மிதுன ராசியினருக்கு அதிர்ஷ்டம் அபரிதமாக இருக்கும். செய்த முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் திருப்தி, மனநிறைவு கிடைக்கும். எதிர்பாராத விதத்தில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.
கன்னி
சாதகமான பலன்களைக் கொடுக்கும் புதனின் வலுவான காலகட்டத்தில் எதிர்பாராத வகையில் எங்கிருந்தோ திடீரென்று பணம் வரலாம். தொட்டதெல்லாம் துலங்கும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். திருமண வாழ்க்கையிலும் காதல் அதிகரிக்கும். காதலர்களுக்கு இது ரம்மியமான காலமாக இருக்கும். குடும்பத்தில், காதலுக்கு பச்சைக்கொடி காட்டப்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
கும்பம்
புதனின் அபரிதமான பலத்தினால், கும்ப ராசியினரின் அறிவுத்திறன் அதிகரிக்கும், அனைவராலும் பாராட்டப்படும் அளவிற்கு உங்களுடைய செயல்பாடுகள் இருக்கும். இந்த காலகட்டத்தில் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். செலவுகளை மட்டும் கட்டுப்படுத்தினால் போதும், நீங்கள் தான் ராஜா. புகழும் மரியாதையும் வந்து குவியும் நேரம் இது… தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நேரம் சாதகமாக இருக்கும்.