OOSAI RADIO

Post

Share this post

UK யில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கைத் தமிழர்!

பிரிட்டனுக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடத்தும் நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்த இலங்கையரை பிரிட்டன் பிரான்ஸுக்கு நாடு கடத்தவுள்ளதாக சன் செய்தி தகவல் வெளியிட்டுள்ளது.

58 வயதான சதாசிவம் சிவகங்கன் என்ற நபரையே பிரான்ஸுக்கு நாடு கடத்த பிரிட்டன் தீர்மானித்துள்ளது.

பிரான்ஸ் நீதிமன்றம் கடந்த வருடம் ஆட்கடத்தலில் ஈடுபட்டார் என தீர்ப்பு வழங்கியதுடன் ஐந்து வருட சிறைத்தண்டனையை விதித்திருந்தது.

இலங்கையிலிருந்து 2003இல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற அகதியான இவருக்கு அங்கு வாழ்வதற்கான சகல அனுமதிகளையும் பிரிட்டன் வழங்கியிருந்தது.

சிவகங்கனின் மனைவியும் பிள்ளைகளும் பிரிட்டிஷ் பிரஜைகள் ஆவர். லண்டனின் தென்மேற்கு பகுதியில் வசித்துவந்த இவர் பிரிக்ஸ்டனில் கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடையொன்றில் தொழில் புரிந்துவந்தார்.

இதேவேளை கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையை சேர்ந்தவர்களை ஐரோப்பிய நாடுகளிற்கு கடத்திய கும்பலின் தலைவராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.

ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக 14 பேருக்கு எதிராக பிரான்ஸ் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.பிரிட்டிஸ் அதிகாரிகள் பிரான்ஸ் அதிகாரிகளின் சார்பில் இவரை 2022இல் முதலில் கைதுசெய்திருந்தனர்.

பிரான்ஸ் விடுத்த பிடியாணையை அடிப்படையாக வைத்து இவரை நாடு கடத்துமாறு 2022 நவம்பரில் நீதிபதியொருவர் உத்தரவிட்டார்.

எனினும் தனது மனைவி உடல் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் தனது துணை அவருக்கு என தெரிவித்து அவரது சிவகங்கன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

எனினும், நீதிபதி அவரது மனுவை நிராகரித்து, உலகின் பல நாடுகளில் செயற்படும் ஐரோப்பிய பரந்துபட்ட குற்றவாளி கும்பலின் முக்கிய நபராக இவர் விளங்கினார் என நீதிமன்ற ஆவணம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Type and hit enter