விவாகரத்துக்கு 250 கோடி- ஷாக்கான நடிகை!
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா தற்போது பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த 20217ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, 4 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தார்.
அதன்பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2021ல் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். விவாகரத்துக்கு காரணம் பலவிதமான கருத்துக்கள் கூறினாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.
மேலும், சமந்தாவை விவாகரத்து செய்தபோது ஜீவனாம்சமாக நாக சைதன்யா 250 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்ததாகவும் அதை சமந்தா வாங்கமறுத்துவிட்டதாகவும் செய்திகள் பரவியது. இதுகுறித்து சமீபத்தில் நடிகை சமந்தா பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் பேட்டியொன்றில் கலந்து கொண்டு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
நாக சைதன்யாவிற்கும் உங்களுக்கும் இடையில் கசப்பான உணர்வுகள் இருந்ததா என்ற கேள்விக்கு நடிகை சமந்தா, அந்த கஷ்டமான உணர்வுகள் என்னவென்றால், இருவரையும் (நாக சைதன்யா – சமந்தா) ஒன்றாக ஒரே அறையில் விட்டால், கூர்மையான பொருட்களை மறைத்து வைத்திருப்பது போன்றது. அந்த உணர்வு இப்போதும் இருக்கிறது.
அதனால் ஒத்துழைக்காமல் போகலாம். மேலும், நீங்கள் சந்தித்த நம்பமுடியாத ரூமர் செய்தி என்றால் எது என்று கேட்டுள்ளார். விவாகரத்துக்கு 250 கோடி ஜீவனாம்சம் கொடுப்பதாக கூறி ஒரு செய்தியை தூங்கி எழுந்தப்பின் பார்த்து வருத்தப்பட்டதாகவும், எப்போது இன்கம் டேக்ஸ் அதிகாரிகள் வருவார்கள் அவர்களிடம் என்னிடம் எதுவுமே இல்லை என காட்டுவதற்காக காத்திருந்தேன் என்றும் காமெடியாக கூறியிருந்தார்.