OOSAI RADIO

Post

Share this post

எச்சரிக்கை – பேரழிவு உண்டாகும் புதிய நோய்!

கொவிட்19 விட பேரழிவு தரும் புதிய நோயை தாக்குபிடிக்க உலகம் தயாராக இல்லை என்று வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

புதிய தொற்று நோய்க்கு டிஸீஸ் எக்ஸ் (X) சமூகவலைதளத்தில் பெயரிட்டுள்ளனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைவர் டெட்ரோசு அதானோம் கெப்ரேயஸ், ‘Disease X’ க்கு உலகம் தயாராக இல்லை என்று ஏற்கனவே கூறியிருக்கிறார்.

உலகத் தலைவர்கள் இந்த ஆண்டின் ஒரு பகுதியை அடுத்த தொற்றுநோய்க்கான தயாரிப்பு பற்றி விவாதித்துள்ளனர்.

கொவிட்19 தொற்றுநோயை விட இது 20 மடங்கு அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் தொற்றுக்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடியுள்ளனர்.

2024 ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார மன்றத்தில் டிஸீஸ் எக்ஸ் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக விலங்குகளின் வாழ்விடங்களில் மனித செயற்பாடு அதிகரிப்பதன் காரணமாக இவ்வறான தொற்று நோய்கள் ஏற்படுவதாக வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter