நீங்கள் இந்த ராசியா? இன்று உங்களுக்கு யோகம்!
மே மாதம் 29 ஆம் நாள் புதன் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 29.05.2024
கிழமை: புதன்
நல்ல நேரம்:
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு:
பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
குளிகை:
காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை
எமகண்டம்:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் – வடக்கு
மேஷம்
சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வெளியூரில் இருந்து இன்பமான செய்திகள் கிடைக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தடைபட்ட சில வேலைகள் நிறைவுபெறும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். குழப்பம் மறையும் நாள்.
ரிஷபம்
மனதில் புதுவிதமான தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு சார்ந்த பணிகளில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். புனித தல பயணங்கள் செல்லும் வாய்ப்பு கைகூடும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். இரக்கம் வேண்டிய நாள்.
மிதுனம்
எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். உறவினர்களின் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். முன்ஜாமின் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். சோர்வு நிறைந்த நாள்.
கடகம்
மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். வர்த்தகப் பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். கவலை விலகும் நாள்.
சிம்மம்
மனதில் இருந்துவந்த குழப்பம் விலகும். உயர் கல்வி குறித்த புதிய தேடல் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்திற்கு தேவையான உதவி சாதகமாக அமையும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோகப் பணிகளில் சில புதுமைகள் மூலம் மற்றவர்களின் கவனத்தை கவர்வீர்கள். இன்பம் நிறைந்த நாள்.
கன்னி
குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். நண்பர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். கவலைகள் விலகும் நாள்.
துலாம்
நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்களின் மூலம் மேன்மை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். புரிதல் பிறக்கும் நாள்.
விருச்சிகம்:
மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஒப்பந்தம் சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். மனதில் உடன் பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். மறைமுகமான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
தனுசு
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். தனவரவுகள் திருப்தியாக அமையும். அனுகூலம் நிறைந்த நாள்.
மகரம்
பாகப் பிரிவினைகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சேமிப்பு சார்ந்த செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சினம் மறையும் நாள்.
கும்பம்
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வீடு மற்றும் வாகன பராமரிப்பு செலவு உண்டாகும். குழந்தைகளின் வழியில் புரிதல் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
மீனம்
மனதில் புதுவிதமான சிந்தனை ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். தடைபட்ட சில பயணங்கள் கைகூடும். சுகம் நிறைந்த நாள்.