இன்று அஷ்டமி திதி – சனி தோஷம் விலகும்!
தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதியில் கால பைரவரை விரதம் இருந்து வணங்கினால் சனி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை
சிவபெருமானின் ஒரு வடிவமான பைரவருக்கு உரிய நாள் அஷ்டமி தினம். இது தேய்பிறை அஷ்டமி நாளன்று அனுசரிக்கப்படுகிறது.
காலபைரவரின் வாகனம் நாய். ஸ்ரீ பைரவர் வழிபாடு எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
2 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்ட ஸ்ரீ பைரவர் வழிபாடு இந்து மதத்தில் முக்கியமானது.
ஏனென்றால், பைரவர் தான், நவக்கிரகங்களுக்கு பிராண தேவதை. அதிலும், சனீஸ்வரருக்கு வரம் தந்து, அவரது கடமையை தவறாமல் செய்ய வைக்கும் காலபைரவரே, சனியின் குரு ஆவார்.
2024 வைகாசி மாதம் தேய்பிறை அஷ்டமி திதி மற்றும் அஷ்டமி திதி நேரம் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி திதி வியாழன் மதியம் தொடங்கி வெள்ளிக்கிழமை காலை முடிவடைகிறது.
வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி 2024 தொடக்க நேரம்: மே 30,2024 காலை 11:22
வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி 2024 முடியும் நேரம்: மே 31, 2024 காலை 08:52
வைகாசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி இம்முறை வியாழக்கிழமை வருகிறது. சிவபெருமானின் அம்சமான தட்சிணா மூர்த்தியையும் இன்று வழிபடுவதும் சிறந்தது.
அஷ்டமி திதியில், அன்றைய தினம் இறைவழிபாட்டிலில் ஈடுபட வேண்டும்.
அஷ்டமி நவமி திதியில் சுப காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பது ஐதீகம்.
சமீப காலமாக காலபைரவரை வழிபடுவதும், தீபம் ஏற்றுவதும், அர்ச்சனை செய்வதும் தேய்பிறை அஷ்டமியன்று அதிகமாக நடந்து வருகிறது.
கால பைரவரைத் தவிர, சிவபெருமானின் மற்றொரு அம்சமான தட்சிணா மூர்த்தியையும் மஞ்சள் மலர்களால் வழிபடலாம்.
தீராத நோய், கடன், பயம் ஆகியவற்றையும் நீக்கி அருள்பவர் கால பைரவர். அனைத்து சிவாலயங்களிலும் பைரவருக்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கிறது.
அதிலும் சமீபமாக, பைரவருக்கென்றே தனிக்கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றனர்.
பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்வது ரொம்பவே விசேஷமானது.
பைரவருக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் வழக்கு முதலான சிக்கல்களில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் நிவர்த்தியாக்கும் என்பது ஐதீகம்.