கொத்தமல்லியின் விலை 1,900/=
நிலவும் சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
மழையுடன் கூடிய வானிலையுடன் மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கரட் 125 முதல் 145 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் கரட் 125 முதல் 145 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் ஒரு கிலோ கிராம் லீக்ஸ் 270 முதல் 290 ரூபாவாகவும், பீட்றூட் 320 முதல் 340 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கு 290 முதல் 310 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் கொத்தமல்லி 1,800 முதல் 1,900 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.