OOSAI RADIO

Post

Share this post

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை?

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்றும், நாளையும் (3,4) மூட தீர்மானித்துள்ளதாக சமூக ஊடகங்கள் ஊடாக பரவிவரும் செய்தியில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளை இன்று (3) மாத்திரம் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இருப்பினும், அரச அல்லது தனியார் துறை நிறுவனங்கள் தொடர்பில் அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாளை (4) பாடசாலை மீள ஆரம்பிக்கப்படுமா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடிய பின்னர் இன்று பிற்பகல் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

மேலும், மோசமான வானிலை காரணமாக ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை மாத்திரம் மூடுவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Type and hit enter