சனி ஜெயந்தியில் – பிரச்சினைக்குிய ராசிகள்!
சனி ஜெயந்தி என்பது சனி பகவான் பிறந்தநாளாகும். 2024 ஆம் ஆண்டில் சனி ஜெயந்தியானது ஜூன் 06 ஆம் திகதி வருகிறது. சனி பகவான் என்றாலே அனைவருக்கும் ஒருவித பயம் இருக்கும்.
ஏனெனில் சனி பகவான் ஒருவரது கர்மத்திற்கு ஏற்ற பலன்களை தவறாமல் அனுபவிக்க வைப்பார். ஆனால் உண்மையில் சனி பகவானைக் கண்டு எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தவறு செய்தால் தான் பயம் கொள்ள வேண்டும்.
சனி ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருக்கும். இந்த ஆண்டின் சனி ஜெயந்தி நாளில் சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருவார். இதனால் சில ராசிக்காரர்கள் சனி பகவானின் சிறப்பான அருளைப் பெறுவார்கள்.
சனி ஜெயந்தியால் சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்கவுள்ளார்கள். அவ்வாறு எந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சினை ஏற்பட போகிறது என்று பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு வேலையை செய்வதாக இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். எவ்வித முடிவை எடுப்பதாக இருந்தாலும், ஒன்றிற்கு பலமுறை யோசிக்க வேண்டும். நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால், பண விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல பலன்களைப் பெற முடியாது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தி நாளானது அவ்வளவு சிறப்பாக இருக்காது. வேலையில் எவ்வித நற்பலன்களையும் பெற முடியாது. சிலருக்கு நிதி இழப்புக்கள் ஏற்படலாம். அதிக வாக்குவாதங்களில் ஈடுபட நேரிடும். இதனால் உங்களின் பல வேலைகள் தடைபடும். இந்நாளில் எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. முதலீடு செய்யும் திட்டம் இருந்தால், அதை சில காலம் தள்ளிப் போட அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களுடன் பிரச்சனைகள் வரலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக விட்டால், பின் அதுவே பெரிய பிரச்சனையைக் கொண்டு வந்துவிடும். முக்கியமாக பண பிரச்சனைகள் அல்லது நிதி இழப்புக்களை சந்திக்க நேரிடும். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக வராமல் போகும். எனவே சற்று கவனமாக இருங்கள்.