பதவி விலகிய மோடி!
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் நரேந்திர மோடி (Narendra modi) பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மோடி அளித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் 17 ஆவது மக்களவையை கலைப்பது குறித்த அமைச்சரவை தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஜூன் 1 ஆம் திகதி நிறைவடைந்தது.
நேற்று (04) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைகாத சூழல் உருவாகி உள்ளது.
இன்று மாலை நடைபெறும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு தனக்கு இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை பிரதமர் மோடி குடியரசுத் தலைவரிடம் அளிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடுவின், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மற்றும் இதர கட்சிகளின் ஆதரவு உடன் பாஜக ஆட்சி அமைப்பதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.