OOSAI RADIO

Post

Share this post

பாவனைக்கு வந்த புதிய நோட்டுகள்!

பிரிட்டனில் மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த கரன்சி நோட்டுகள் நேற்றுமுதல் (4) மக்கள் பாவனைக்கு வந்துள்ளது. மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த 10, 20 மற்றும் 50 பவுண்டு கரன்சி நோட்டுக்களை இங்கிலாந்து வங்கி வெளியிட்டுள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்குப் பிறகு பிரிட்டன் அரசராக சார்லஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில், மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த சிறப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் பிரிட்டனில் மூன்றாம் மன்னர் சார்லஸூ பாங்க் ஆப் இங்கிலாந்து பிரதிநிதிகளால் அவரது உருவப்படம் கொண்ட முதல் செட் கரன்சி நோட்டுகள் நேற்று வழங்கப்பட்டன.

எனினும் அன்றாட பண பரிவர்த்தனைக்கு அவை சில காலத்திற்கு அரிதாகவே இருக்கும். இதுதொடர்பாக இங்கிலாந்து வங்கி கூறுகையில்,

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவம் கொண்ட நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகள் அச்சிடப்படும் அல்லது பண பயன்பாடு குறைந்து வரும் நேரத்தில் தேவை அதிகரிப்பதற்காக மட்டுமே அச்சிடப்படும்.

புதிய நோட்டுகளுடன் இணைந்து இரண்டாம் எலிசபெத் மகாராணி உருவப்படம் அச்சிடப்பட்ட நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும்.

சில காலத்தில் அன்றாட பண பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படுபவற்றில் பெரும்பகுதியாக இருக்கும். வரும் வாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சல் அலுவலகக் கிளைகளில் இருந்தும் அவை கிடைக்கும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது.

Leave a comment

Type and hit enter