OOSAI RADIO

Post

Share this post

அடிச்சதுல வயிற்றில் இருந்த குழந்தை வெளியே வந்து!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி கடந்து வந்த வேதனை நாட்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தன் மூலமாக பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி.

தொடர்ந்து சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வந்தார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தின் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது ஃபோட்டோக்களை பகிர்வது வழக்கம். இந்நிலையில், ரேஷ்மா பசுபுலேட்டி அளித்த பேட்டி ஒன்றில், நான் அமெரிக்காவில் இருந்தேன்.

என் கணவர் பாக்ஸர் அதற்காக அவர் நிறைய மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது, நான் நான்கு மாத கர்ப்பமாக இருந்தேன், அதை மறந்துவிட்டு என்னை அடித்துவிட்டார். அப்போது, குழந்தை வெளியில் வந்துவிட்டது. அவர் பயத்தில் என்னை விட்டு ஓடிவிட்டார்.

என்ன செய்வது என்று தெரியாமல், காரை எடுத்துக்கொண்டு தனியாக நானே மருத்துவமனையில் சேர்ந்தேன். நான்கரை மாத குழந்தையாக ராகுல் பிறந்தான். அப்போதில் இருந்து 9 மாதம் வரை அவன் இங்குபெட்டரில் இருந்தான். அவனுக்காக நான் பார்க்காத மருத்துவம் இல்லை.

செய்யாத செலவு இல்லை. அந்த நிலையை சமாளிக்க முடியாமல் பெற்றோருடன் இங்கே வந்துவிட்டேன். ராகுல் பிறப்பதற்கு முன்பே எனக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இதனால், ராகுலும் போய்விடுவானோ என்ற பயம் எனக்குள் இருந்தது. இதனால் நான் அவனை காப்பாற்ற போராடினேன்.

என் முதல் குழந்தையை அனைவரும் மறந்துவிட்டார்கள். ஆனால், என்னால் அந்த நாளை இன்று வரை மறக்கவே முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter