வெளியான படுக்கையறை புகைப்படம் – ஷாக்கான ரசிகர்கள்!
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். மலையாள நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகை மஞ்சு வாரியர், நடிகர் தீலீப் குமாரை திருமணம் செய்து ஒரு மகளை பெற்றெடுத்தார். அதன்பின் சில ஆண்டுகளுக்கு பின் திலீப் குமாரின் நடவடிக்கை பிடிக்காமல் கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் மஞ்சு வாரியர்.
இதனை தொடர்ந்து தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அஜித்தின் துணிவு படத்தினை தொடர்ந்து ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் முக்கிய ரோலில் ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மலையாளத்தில் FOOTAGE என்ற படத்தில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். தற்போது அப்படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. முக்கிய ரோலில் நடித்துள்ள இப்படத்தில் நடிகர் விஷாக் நாயர், நடிகை காயத்ரி அசோக் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் ஷூட்டிங்கினை முடித்து படக்குழுவினருடன் எடுத்த புகைப்படத்தையும் அவர்களுடன் உரையாடிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் மெத்தையில் காயத்ரி அசோக், விஷாக் நாயர் மடியில் இறுக்கமாக கட்டியணைத்தபடி எடுத்த புகைப்படம் இருக்கிறது. இதனை பார்த்த பலர் அது மஞ்சு வாரியர் தான் என்று நினைத்து அவரா இப்படி என்று கருத்துக்களை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.