OOSAI RADIO

Post

Share this post

புதிய வேலை தொடங்க சிறந்த நாள் உங்களுக்கு!

இன்றைய ராசிபலன் ஜூன் 07, 2024, குரோதி வருடம் வைகாசி 25 வெள்ளிக் கிழமை, சந்திரன் மிதுன ராசியில் சஞ்சரிக்கிற நிலையில் பொருளாதார நிலை சீராகி புதிய வேலையை தொடங்க மிகவும் சிறப்பான நாளாக எந்த ராசிக்காரர்களுக்கு அமைய போகின்றது என நாம் இங்கு பார்போம்.

மேஷ ராசி

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒருவருக்கு பதவி உயர்வு கிடைத்து குடும்பமே மகிழ்ச்சி அடையும். உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் விவேகத்தை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். குடும்ப பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். இன்று உங்களின் பேச்சில் இனிமையைக் கடைப்பிடிப்பது அவசியம். உறவினர்களிடம் நல்லிணக்கம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிக்க முடியும்.

ரிஷப ராசி

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று முக்கியமான நாளாக அமையும்.. வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். இன்று புதிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள்.. உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். சமூக பணிகளில் கௌரவம் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான முக்கிய திட்டங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.

மிதுன ராசி

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று கடந்த சில நாட்களை விட இன்று மிகச் சிறப்பானதாக அமையும். இன்று ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழுங்கள். அதிக பணம் செலவிட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களுக்கு சலுகைகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயத்தில் சிறப்பான பலனை பெறுவீர்கள். உங்கள் பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். வழக்கு விஷயத்தில் வெற்றி கிடைக்கும்.

கடக ராசி

கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிந்தனையுடன் முன்னேற வேண்டிய நாள். பணியிடத்தில் உங்களின் திறமைகளை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரம், தொழில் தொடர்பான கவலைகள் குறையும். பெற்றோர் மூலம் நிதி நன்மைகளை பெறுவீர்கள். உங்களின் நற்பெயர் அதிகரிக்கும். புதிய நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும்.

சிம்ம ராசி

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்கக் கூடிய நாள். இன்று உங்களின் வருமானத்தை உணர்ந்து, திட்டமிட்டு செலவிடவும். பணப்பரிவுரதனைகளில் கூடுதல் கவனம் தேவை. கல்வி தொடர்பான முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை, படிப்பு தொடர்பாக வெளியூர், வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான நாள். எந்த ஒரு முதலீட்டிலும் கூடுதல் கவனம் தேவை.

கன்னி ராசி

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். உங்களின் திறமையை நிரூபிக்க முடியும். குடும்பத்தில் அமைதியான சூழல் மிகவும். உங்களின் பணத்தையும் கவனமாக கையாளவும். பணியிடத்தில் நிலவும் வதந்திகள், அரசியலில் இருந்து விலகி இருக்கவும். இன்று யார் என்ன சொன்னாலும் அதை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். இன்று பிறரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வதில் கூடுதல் கவனம் தேவை.

துலாம் ராசி

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டம தினமாக அமைகிறது. எந்த ஒரு வேலையிலும் கூடுதல் கவனமும், சரியான திட்டமிடலும் அவசியம். கலவையான பலன் தரக்கூடிய நாள். குடும்ப உறுப்பினர்கள் மீது தானா அன்பு அக்கறை அதிகரிக்கும். உங்களின் வேலை கவனம் தேவை. இன்று உங்களின் விருப்பங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான விஷயத்தில் புதிய சிக்கல்கள் ஏற்படலாம். இன்று உங்கள் வீட்டில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பொதுநல பணிகளில் ஈடுபடுவீர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு பெரிய பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் தலைமைத்துவம் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களின் ஆலோசனை சிறப்பான பலனைத் தரும்.. ஆன்மீகம் தொடர்பான விஷயத்தில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். மாணவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாள்.

தனுசு ராசி

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். இன்று சில முக்கிய வாதங்களில் கலந்து கொள்கிறீர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். எந்த ஒரு செயல் செய்தாலும் உங்கள் மனைவியின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் ஆரோக்கியம் மற்றும் உணவு விஷயத்தில் அக்கறை தேவை.

மகர ராசி

மகர ராசி அன்பர்களுக்கு இன்று பண பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் தேவை. அவசரமாக எந்த ஒரு பணியிலும் ஈடுபட வேண்டாம். இன்று பணியிடத்தில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். எதிரிகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. இன்று உங்கள் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க கடின உழைப்பு மற்றும் திட்டமிடல் அவசியம். மூத்த உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

கும்ப ராசி

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தின் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு கிடைக்கும். கூட்டு முயற்சிகள் மூலம் நல்ல லாபத்தை பெறுவீர்கள். வீட்டில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்களின் மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீன ராசி

மீன ராசி அன்பர்களுக்கு இன்று பணப்பரிவர்த்தனைகளில் கவனம் செலுத்தவும். இன்று உங்கள் செயலில் அவசரம் காட்ட வேண்டாம். பணியிடத்தில் சவால்களைச் சந்திக்க நேரிடும். இருப்பினும் பயம் கொள்ளாமல் கவனமாக செயல்பட எதிலும் வெற்றி கிடைக்கும். உங்களின் செயல் திறன் அதிகரிக்கும். உங்களின் கடின உழைப்பின் மூலம் வெற்றியடைவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும்.

Leave a comment

Type and hit enter