ஹனிமூனில் இருந்து ஓடி வந்த நடிகர்!
நடிகை கஜோல் ஹனிமூன் குறித்து அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.
90 களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை கஜோல். ‘மின்சார கனவு’ படத்தில் நடிகர் பிரபுதேவா மற்றும் அரவிந்த்சாமியுடன் கதாநாயகியாக நடித்தார்.
அதன்பின், ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் வில்லியாக ரீ-எண்ட்ரி கொடுத்தார். தற்போது, வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில், 1999ல் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
அவர்களுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் கஜோல் அளித்த பேட்டி ஒன்றில், திருமணத்திற்கு முன்பு அஜய் தேவ்கனுக்கு ஒரு நிபந்தனை விதித்தேன். 2 மாதங்கள் தேனிலவுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும்.
அதற்கு சம்மதம் சொன்னால் தான் நான் திருமணத்திற்கு சம்மதிப்பேன் என்று கூறினேன். உன் விருப்பமே என் விருப்பம் என்று கூறி திருமணம் செய்துக்கொண்டார். அதன்பின், ஒவ்வொரு நாடாக செல்லச் செல்ல அஜய் தேவ்கனுக்கு முடியவில்லை.
40 நாட்கள் முடிந்த நிலையில் எனக்கு உடம்புக்கு சரியில்லை, உடனே வீட்டுக்கு போக வேண்டும் என சின்னப் பிள்ளை போன்று அடம் பிடித்தார் எனத் தெரிவித்துள்ளார்.