ஆழ்கடலில் புதிய உயிரினம் – அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்!
பசுபிக் பெருங்கடலில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய உயிரினமொன்று ஏலியன் போன்ற தோற்றத்தில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோவிற்கும் ஹவாய் தீவின் இடைப்ப பசுபிக் கடல் பிரதேசத்தில் இதற்கு முன் யாரும் பார்த்திராத இந்த வினோத உயிரினம் வாழ்வதாகவும் கடலின் 11,480 முதல் 18,045 அடியாழத்தில் அபிசோபெலாஜிக் என்று அழைக்கப்படும் கடல் மட்டத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த உயிரினமானது கண்ணாடியின் தன்மையுடைய கடல் குக்கும்பர் என்று ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியுள்ளதுடன் இதற்கு “Unicumber” என்று பெயர் சூட்டபட்டுள்ளது.
அத்தோடு, இந்த உயிரினம் மிகப்பெரிய உடல் அமைப்பை கொண்டுள்ளதுடன் கடலின் தரைமட்டத்தில் உள்ள இயற்க்கைக் குப்பைகளை உண்டு இவை உயிர்வாழ்கின்றன.
அதாவது, இவை கடலின் வேக்கும் கிளீனர் போல் செயல்படுவதுடன் கடல் பன்றி என்று குறிப்பிடப்படும் ஒரு உயிரினமும் அப்பகுதியில் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவற்றைக் குறித்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்து வரும் ஆய்வாளர்கள், பசிபிக் கடல் பிரதேசத்தின் அடியாழத்தில் வாழும் 10 இல் 9 உயிரினங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படாமலேயே உள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.